லைசென்ஸ் இன்றி பயணித்தால் ரூ 1,00,000 வரையில் அபராதம்..!!

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்ற புதிய மோட்டார் வாகன மசோதாவுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகனம் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது தொடர்பான புதிய மோட்டார் வாகன மசோதா நீண்ட நாட்களாக மாநிலங்களவையில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில்,  பிரதமர்  மோடி தலைமையிலான கேபினட் நேற்று திருத்தப்பட்ட இந்த  மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Image result for லைசென்ஸ் இன்றி

இதன் அடிப்படையில், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஆபத்தான பயணம், குடிபோதையில் பயணம், அதிவேகமாக செல்லுதல், அதிக நபர்களை வாகனத்தில் ஏற்றிச் செல்லுதல் ஆகிய போக்குவரத்து விதிமுறையை மீறுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.. ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை ஊர்திகளுக்கு வழி விடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ 10,000 அபராதம் விதிக்க இந்த மசோதா ஒப்புதல் அளித்துள்ளது.

இதேபோல், லைசென்ஸ் இல்லாமல் விதிமுறைகளை மீறி பயணிப்பவர்களுக்கு ரூ  1,00,000  வரையில் அபராதம் விதிக்கவும் இந்த மசோதா அனுமதியளித்துள்ளது. நாட்டின் 18 மாநிலங்களில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் கலந்து ஆலோசித்து, பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.