சிபில் ஸ்கோர் மதிப்பு எதிர்மறையாக பதிவு…. தனியார் வங்கிக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பணக்கார வீதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவிநாசி ரோட்டில் இருக்கும் ஆர்.பி.எல் வங்கியின் மூலம் கிரெடிட் கார்டு வாங்கினேன். இதனையடுத்து சர்வீஸ் சார்ஜ் கூடுதலாக இருந்ததால் அதனை ரத்து செய்ய விண்ணப்பித்தேன்.

அவர்களும் ரத்து செய்துவிட்டதாக பதில் அனுப்பினர். அதன் பிறகு அடுத்த ஆண்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது. இதனால் விளக்கம் கேட்டு வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அதன் பிறகு நான் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து என்.ஓ.சி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த போது எனக்கு சான்றிதழ் வழங்கவில்லை. மேலும் சிபில் ஸ்கோர் மதிப்பை எதிர்மறையாக மாற்றி பதிவு செய்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட வங்கி உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனுவை விசாரித்த நுகர்வோர் குறைவீர் நீதிமன்ற நீதிபதி தங்கவேல் சம்பந்தப்பட்ட தனியார் வங்கி பாண்டியனுக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவு தொகை 5 ஆயிரம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மேலும் சிபில் ஸ்கோர் எதிர்மறை பதிவை நீக்கி, என்.ஓ.சி சான்றுகளை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.