“உரிய ஆவணங்களின்றி வந்த வாகனங்கள்” அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

வாகன உரிமையாளர்களுக்கு ரூபாய் 4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழி பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான வாகன சோதனை நடைபெற்றது. இந்த ஆய்வினை மேற்கொண்ட வாகன ஆய்வாளர்கள் தொடர்ந்து 4 நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதில் ரூபாய் 4 லட்சத்து 35 ஆயிரத்து அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட 4 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *