எலும்புகள் கிடக்கின்றன…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!!

மின் வேலி அமைத்து காட்டுப்பன்றிகளை கொன்ற உரிமையாளருக்கு ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் மடத்துக்குளம் அருகில் உள்ள தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் வேலியில் சிக்கி காட்டுப்பன்றிகள் உயிர் இழப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. எனவே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

அதில் மின் வேலி அமைத்து காட்டுப்பன்றிகள் கொல்லப்பட்டிருப்பது உறுதியானது. மேலும் அந்த பகுதியில் காட்டுப் பன்றியின் மண்டையோடு மற்றும் எலும்புகள் கிடந்தது. எனவே வனதுறையினர் தோட்ட உரிமையாளர் தாமஸ் ஸ்டீபன் மெல்கிக்கு அதிகாரிகள் ரூ 10,000 அபராதம் விதித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *