”கண்டுபிடித்து தாருங்கள்” வைகோ மனு- நீதிமன்றம் மறுப்பு…!!

பரூக் அப்துல்லா-வை கண்டுபிடித்து தரக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இலிருந்து அங்கு மிகவும் பதட்டமான சூழலில் நீடிக்கின்றது.இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அண்ணா பிறந்தநாளையொட்டி காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை அழைக்கும் விதமாக வைகோ  தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனவே காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கண்டுபிடித்து தர கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த சூழ்நிலையில் வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை எப்போது விசாரிப்பது என்பதை  தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். இதனால் வைகோவின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.