நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் கூட்டம்..!!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. 

பாரதிய ஜனதா இரண்டாவது முறையாக பொறுப்பெற்ற பின் தனது நிதி நிலையறிக்கையை வரும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசித்து, நிதி நிலையறிக்கையை தயார் செய்து வருகிறார்.

Image result for Nirmala Sitharaman

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின்  கருத்துகளை கேட்பது வழக்கம். அதன் படி டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்  ஜூலை 5ல் தாக்கல் செய்யபடவுள்ள பட்ஜெட் பற்றி நிர்மலா சீதாராமன் மாநில அமைச்சர்களுடன் விவாதிக்கிறார்.