இறுதி செமஸ்டர் தேர்வு… ஆன்லைனில் ஒரு மணி நேரம்.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று எதிரொலியாக மற்ற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று யுஜிசி அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக் கழகமும் ஆன்லைனில் ஒரு மணி நேரம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு நான்கு முறை இந்த தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள பல்கலைக்கழகம் அப்ஜெக்டிவ் முறையில் 40 கேள்விகள் கேட்கப்படும் என்றும், அவற்றில் 30 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும் என்றும் அறிவித்துள்ளது. வழக்கமாக 3 மணி நேரம் நடைபெறும் தேர்வு இம்முறை ஒரு மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி முதல் காலை, மாலை என இருவேளைகளில் இந்த ஆன்லைன் தேர்வுகள் நடக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *