ஆப்கானில் தலீபான்களுடன் சண்டை……. ஒரே நாளில் 24 பேர் பரிதாபமாக பலி….!!

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகள் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. தலீபான்களை முற்றிலுமாக ஒழிக்க முடியாத நிலையில்   தொடர்ந்து ஏதேனும் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி வருகின்றது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி மாகாணத்தின் தலைநகரான கஜினி நகரையடுத்து அமைந்துள்ள புறநகர் பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளின் மீது தலீபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல்களில் 9 போலீஸ் அதிகாரிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

தலீபான் பயங்கரவாதி க்கான பட முடிவு

இதைத்தொடர்ந்து பாதக்‌ஷான் மாகாணத்தின் தலைநகரான பைசாபாத் அருகே அமைந்துள்ள  ஆர்கான்ஜகாவில் தலீபான் பயங்கரவாதிகளும், பாதுகாப்பு படையினரும் சண்டை ஏற்பட்டது. துப்பாக்கிகள், கையெறி குண்டுகளை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் விடாமல் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் 5 பேரும் , பொதுமக்களில் 2 பேரும் மற்றும்  தலீபான் பயங்கரவாதிகள் 8 பேர் பலியாயுஉள்ளனர். இந்த கொடூர தாக்குதல்களால் அந்த பகுதி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திள்ளதாக தெரிகின்றது.