“அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ்” கிராம உதவியாளருக்கு நடந்த கொடுமை…. வலைதளத்தில் வைரல் வீடியோ….!!!

கிராம நிர்வாக உதவியாளரை 5 பேர் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் கிராம நிர்வாக உதவியாளராக கருணாநிதி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். அவரது மனைவி பிரியா ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேலின் ஆதரவாளர்கள் பொங்கல் தினத்தையொட்டி சக்தி பாசறை என்ற பிளக்ஸ் போர்டை அப்பகுதியில் வைத்துள்ளனர். ஆனால் உரிய அனுமதி எதுவும் இன்றி பிளக்ஸை  வைத்ததால் காவல்துறையினர் அதனை அகற்றியுள்ளனர். இவ்வாறு காவல்துறையினர் பிளக்ஸை அகற்றியதற்கு கிராம நிர்வாக உதவியாளரான கருணாநிதி தான் காரணம் என்று கூறி சக்தி பாசறையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அவரின் வீடு புகுந்து பெண்கள் உட்பட அனைவரையும் தாக்கியுள்ளனர். இதில் கிராம நிர்வாக உதவியாளர் கருணாநிதி படுகாயமடைந்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த பாப்பாநாடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *