கொரோனோவின் கோர முகம்….. “தகராறு” மலையென குவிந்த விண்ணப்பம்….!!

சீனாவில் பரவும் கொரோனோ நோயால் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிட்ட நிலையில் கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு இதுவரை 300க்கும்  மேல் விவாகரத்து விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன.

சீனாவின் ஹுகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் படிப்படியாக பரவி லட்சத்திற்கும் மேற்பட்டோரை அந்நாட்டில் பாதித்துள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கில் உயிர்களை பலி வாங்கி அதைத் தொடர்ந்து சீன அரசு வீட்டிலிருந்தபடியே ஊழியர்களை வேலை பார்க்க அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்து ஊழியர்கள் பணியை தொடங்க குடும்பத்தினுள் சண்டை ஏற்பட ஆரம்பித்தது. வீட்டில் அதிக நேரம் இருந்து பணியாற்றும் சமயத்தில் கருத்து வேறுபாடு  ஏற்படுவதன் காரணமாகவும்,

வேலை மீதான கோபத்தில் கணவன் மனைவியின் மீதோ அல்லது மனைவி கணவன் மீதோ காட்டும் போது ஏற்படும் மோதலினால் மன விரக்தி ஏற்பட்டு தென்மேற்கு சீனாவில் மட்டும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.