100 நாள் வேலைத்திட்டம்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. நாகையில் பரபரப்பு….!!!

100 நாள் வேலை திட்டத்தின் போது தகராறில் ஈடுபட்ட 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரணியம் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் 100 நாள் வேலை திட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் 2 பெண்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சத்யா என்பவரை அதே பகுதியில் வசித்து வரும் கலாராணி, அலமேலுமங்கை இருவரும் தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த சத்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் அலமேலுமங்கையையும், கலா ராணியையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *