“மாட்டின் மீது மோதிய பேருந்து” தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர்…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!!

மாட்டின் மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பணம்பாக்கம் கிராமத்தில் ரஞ்சித் எனபவர் வசித்து வருகின்றனர். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். அந்த தனியார் பேருந்தில் 20 பெண்களை அழைத்துக்கொண்டு ரஞ்சித் தொழிற்சாலை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது வேப்பஞ்சேரி  சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது எதிர்பாராதவிதமாக பேருந்து மோதியது.

இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த நந்தகுமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஓடிவந்து ரஞ்சித்தை தாக்கியுள்ளனர். இதனையடுத்து ரஞ்சித்தும் பதிலுக்கு நந்தகுமார் தரப்பினை தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் நந்தகுமார், ரஞ்சித் உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *