மிளகாய் பொடியை தூவி…. இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 9-ஆம் தேதி 2 -ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் வாக்குப்பதிவின் போது இந்திரா நகர் சாவடியில் தி.மு.க மற்றும் அ.ம.மு.க வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இருதரப்பினரும் கற்களைக் கொண்டும், மிளகாய்பொடி வீசியும் ஆக்கிக் கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது குறித்து இருதரப்பினரும் னித்தனியாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் மொத்தம் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *