“நண்பருடன் சென்ற வாலிபர்” திடீரென நடந்த சம்பவம்…. வலைவீசி தேடும் போலீஸ்….!!!

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள தளவாபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜசேகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது நண்பர் கார்த்திக்குடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அறிவழகன், மாரி, மணி ஆகியோர் ராஜசேகரனை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த மணி உட்பட 3 பேரும் கீழே கிடந்த கட்டையை எடுத்து ராஜசேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜசேகர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ராஜசேகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்து ராஜசேகரன் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மணி உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *