“எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிடாங்க” நள்ளிரவில் நடந்த சம்பவம்…. தஞ்சையில் பரபரப்பு….!!!

நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல் 4 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரத்தை சேர்ந்தவர் சோலை சுப்பிரமணியன். இவருக்கு வீராச்சாமி என்ற சகோதரர் உள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜகுமாரி என்ற மனைவியும், வீர பிரசாத் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் வீராச்சாமி தனது மனைவியை பிரிந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகின்றது.

இதனால் சோலை சுப்பிரமணியின் மாடி வீட்டின் கீழ் பகுதியில் ராஜகுமாரி தனது பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். மேலும் சோலை சுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் மாடியில் வசித்து வருகின்றார். இந்நிலையில் இருவரின் குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் கோபமடைந்த ராஜகுமாரியின் மகன் வீர பிரசாத் மற்றும் அவரது உறவினர்களான சுப்பிரமணியன், நாராயணன், சிதம்பரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் சோலை சுப்ரமணியனின் வீட்டிற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சோலை சுப்பிரமணியன், அவரது மகன்களான தர்மராஜ், ஜெகதீஸ்வரன் மற்றும் சித்தப்பா அண்ணாமலை ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் அடித்து சேதப்படுத்தி  உள்ளனர். இதில் படுகாயமடைந்த 4 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் சோலை சுப்பிரமணியன் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *