“இருவருக்கும் இடையே முன் விரோதம்” வாலிபரை குத்தி கிழித்த மர்ம கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!!

தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். இதில் கூலி தொழிலாளியான இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் மாட்டுவண்டி பந்தயம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சதீஷ்குமார் வேலை முடிந்ததன் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அரண்மனை வடக்கு தெருவில் வைத்து சிலர் வழிமறித்து அவரிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மாட்டு வண்டியின் அச்சாணியை எடுத்து சதீஷ்குமாரை சரமாரியாக குத்தியுள்ளனர்.

அது மட்டுமல்லாது உடற்பயிற்சி செய்யும் இரும்பு பொருட்களை வைத்தும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் நிலை குளைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை பிடித்து காவல்துறையில் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.