“இரு தரப்பினரிடையே மோதல்” மத்திய அரசு ஊழியருக்கு நடந்த கொடுமை…. காஞ்சியில் பரபரப்பு….!!!

மத்திய அரசு ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் பத்ம குரு என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமாகி சிந்து என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பத்ம குருவிற்கும் அதே பகுதியை சேர்ந்த மீனா என்ற பெண்ணிற்கும் பழக்கம் இருந்துள்ளது. எனவே சிந்து மீனாவின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மீனா, அவருடைய கணவர் ரஜினி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் பத்ம குருவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் கோபமடைந்த பத்ம குரு வீட்டிலிருந்த கத்தியால் மீனாவின் உறவினர்களான குமரன், விஷ்வா ஆகியோரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஷ்வாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த குன்றத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரனின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பத்ம குருவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிரிழந்த குமரன் மத்திய அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *