“வீடு புகுந்து எங்களை அடிச்சுட்டாங்க” கணவன்-மனைவிக்கு நடந்த கொடுமை… போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!!

கணவன் மனைவியை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் ராஜலிங்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி மேனகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கலைமணி, தினேஷ் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கலைமணி, தினேஷ் ஆகியோர் மேனகாவின் வீட்டிற்குள் புகுந்து கணவன்-மனைவி இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். எனவே மேனகா குளித்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினேஷை கைது செய்ததோடு தலைமறைவாக உள்ள கலைமணி வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *