ஐந்தாவது திருமணம் செய்து கொண்ட ஆஸ்கார் விருது நடிகர்…. வெளியான தகவல்…!!

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் இளம் பெண் ஒருவரை ஐந்தாவதாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் நிக்கோலஸ் கேஜ் தற்போது ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். 57 வயதாகும் நிக்கோலஸ் 26 வயதுடைய இளம் பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்கள் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி லாஸ் வேகாஸில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்களது திருமணத்தை செய்துகொண்டனர்.

இதற்கு முன்னதாக நடிகர் நிகோலஸ் கேஜ் 1995 முதல் 2001 வரை நடிகை பாட்ரிசியாவுடன் வாழ்ந்து வந்தார்.அதன்பின் 2002ல் இருந்து 2004 வரை லிசா மேரி பிரஸ்லியுடன் வாழ்ந்து வந்தார். இதைத்தொடர்ந்து 2004 முதல் 2016 வரை ஆலிஸ்லி என்பவருடன் வந்தார். பின்பு 2019ஆம் ஆண்டு எரிகா குக்கி என்பவருடன் நான்கு நாட்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இவர் தற்போது 26 வயதுடைய ரிக்கோ ஷிபாடாவை ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *