ஊர்த் திருவிழாவை காரணமாக வைத்து தேர்தலை தள்ளி வைக்க கோரி ஊர் பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திடம் மனு

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட மக்கள் தேர்தலை தள்ளி வைக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து உள்ளனர் இதனை தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டது மேலும் இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு தேவை என்றே கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நாடாளுமன்றத் தேர்தல் ஆனது வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா நடைபெறும் இந்த திருவிழா நேரத்தில் தேர்தல் வைப்பது என்பது மக்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்றும் இதனால் திருவிழா பாதிக்கப்படும் என்றும் அந்த மதுரை மாவட்ட மக்கள் தேர்தலை தள்ளி வைக்க கோரி மனு ஒன்றை அளித்தனர்

இதனைத் தொடர்ந்து அந்த மனுவை நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ரத்து செய்தது தேர்தல் ரத்து செய்ய மறுக்கப்பட்டதை தொடர்ந்து அந்த ஊர் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

அந்த கடிதத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ள தேர்தல் நேரத்தில் மதுரை மாவட்டத்தில் வருடம் தோறும் நடக்கக்கூடிய சித்திரைத் திருவிழா நடக்க இருப்பதால் இங்கு தேர்தலுக்கு பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆகையால் கூடுதலாக காவலர்கள் இங்கே தேவைப் படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார் மேலும் சித்திரை திருவிழாவையொட்டி தேர்தல் வருவதால் கூடுதலாக 3,100 காவல்துறையினர் தேவை என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார் ஏற்கனவே பன்னிரண்டாயிரம் காவலர்கள் தேர்தல் மற்றும் சித்திரை திருவிழா பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதனை தொடர்ந்து கூடுதலாக 3700 காவலர்கள் தேவை என்று அந்த கடிதத்தில் மாவட்ட ஆட்சியர் அவர் குறிப்பிட்டுள்ளார்