பெயரே புதுசா இருக்கே….!! நடைபெற்ற வடமாடு பிடி விழா…. கலந்துக்கொண்ட வீரர்கள்….!!!

மாடுபிடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிஹள்ளி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு முதன் முறையாக மாடுபிடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 20-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதனையடுத்து கிராம மக்கள் மேளதாளங்களுடன் கோ பூஜை செய்து புனித நீரை காளைகளின் மேல் தெளித்தனர்.

அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக திறந்து விடப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். அதன் பின்னர் மாடுகளை பிடித்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பிடிபடாமல் ஓடிய மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *