நாளை கொடியேற்றம்…. பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பங்குனி மாதத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பக்தர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடிக்கு சென்று தீர்த்தக்காவடி எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும். இந்த திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சுமார் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வருகிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம் 4-ஆம் தேதி மாலை கிரிவீதியில் நடைபெற உள்ளது. பின்னர் 7-ஆம் தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.