வெள்ளத்தால் பாதித்த நகரம்… பெண் செய்தி தொடர்பாளரின் மோசமான செயல்… வெளியான பரபரப்பு வீடியோ..!!

ஜெர்மனியில் பெண் செய்தி தொடர்பாளர் ஒருவர் செய்தி தொகுப்பின் போது செய்த மோசமான செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் RTL தொலைக்காட்சியில் பணிபுரிந்தவரும், Good Morning Germany, Good Evening RTL உள்ளிட்ட பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவருமான Susanna Ohlen (39) நிகழ்ச்சி ஒன்றை தொகுப்பதற்காக Bad Munstereifel என்ற நகரத்துக்கு தனது செய்தி குழுவுடன் சென்றுள்ளார். அங்கு RTL தொலைக்காட்சியில் ஒலி பரப்புவதற்காக ‘பெருவெள்ளத்துக்குப் பின் நகரை சுத்தமாக்கும் மக்கள்: கைகொடுத்த தொலைக்காட்சி நிருபர்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்துள்ளனர்.

அதில் Susanna அந்த கிராமத்தை சுத்தம் செய்வது போல் நடித்து தரையிலிருந்த சேற்றை எடுத்து தனது உடல் கை, கால்களில் பூசியது செய்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. அதனை அங்கிருந்த ஒருவர் அவர்களுக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதன்பிறகு சமூக ஊடகத்தில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்த உடன் RTL தொலைக்காட்சி Susanna-வை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் பத்திரிக்கை தர்மத்தை மீறியதற்காக Susanna தங்களது தொலைக்காட்சியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதாக RTL தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *