‘அச்சம் என்பது மடமையடா”…. படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா…..?

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அச்சம் என்பது மடமையடா”. இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அரசியல் ஆர்வத்தில் நடிகர் விஜய் | Dinamalar Tamil News

இந்நிலையில், இந்த படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது தளபதி விஜய் தானாம். அப்போது இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதால், பிறகு சிம்பு இந்த படத்தில் நடிக்க கமிட்டானார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *