தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த முக.ஸ்டாலின்….!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்த்தை டிவீட்டரில் தெரிவித்துள்ளார்.

தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் பல்வேறு  நாடுகளில் ஜூன் மாதத்தின் 16_ஆம் தேதி  இந்த தினம் கொண்டாப்படுகிறது. இதையடுத்து அனைவரும் தங்களின் தந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தந்தையர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து குறிப்பில் ,

அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்….தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் தலைவர் கலைஞர். அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர். உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை! தந்தைக்கு வாழ்த்துக்கள்! அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துகள்!என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.