தக்காளி விலை கடும் சரிவு ..!!விவசாயிகள் கவலை ..!!!

தேனி மாவட்டத்தில் தக்காளி விலை கடுமையாக  சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர் .

தேனி மற்றும் தேவதானப்பட்டி, தாமரைக்குளம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி பெரிதும் பயிரிடப்படுகிறது .போதிய மழை இல்லாததால் தக்காளி விளைச்சல்  குறைந்துள்ள நிலையில் ,ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிகத்தின் பல பகுதிகளுக்கு தக்காளி கொண்டு வரப்படுகிறது .

tomato க்கான பட முடிவு

இதனால் இப்பகுதியில் விளையும் தக்காளிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள்  வருத்தமடைந்துள்ளனர் .கடந்த மாதம்  15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 700 -750 ரூபாய் வரை விலை போன நிலையில் தற்போது 300 முதல் 325 ரூபாய் வரை மட்டுமே விலை போவதாகவும் கூறுகின்றனர் .