சத்தியமங்களம் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை…!!

 தஞ்சாவூர் அருகே தொழிலாளி வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம்  கபிஸ்தலம் அடுத்துள்ள  சத்தியமங்களம் ஊராட்சியில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த  ராமலிங்கம்  (வயது 60) . இவர் விவசாயக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்  தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். மேலும் வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

தொடர்புடைய படம்

மயங்கிய ராமலிங்கத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  இறந்தார். இச் சம்பவம் குறித்து அவரது மகன் சங்கர் தந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்தார். அவர்  கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன்,சப்-இன்ஸ்பெக்டர்கள் வேம்பு, ராகவன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.