அவதிப்பட்ட விவசாயி….. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செம்படம்புத்தூர் பகுதியில் விவசாயியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக் குறைவினால் அவதிப்பட்ட சீனிவாசன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சீனிவாசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *