தோட்டத்து அறையில் கிடந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

தோட்டத்தில் மர்மமான முறையில் விவசாயி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள காசிதர்மம் கிராமத்தில் விவசாயியான சுடலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொக்கம்பட்டியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற சுடலை நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்குள்ள மோட்டார் பம்புசெட் அறையில் சுடலை சடலமாக கிடந்ததை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுடலையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுடலை இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *