“பண்ணை வீடு”… ஸ்டாலின், கமல் ரகசிய சந்திப்பு… வெளியான புதிய தகவல்..!!

பண்ணை வீட்டில் ஸ்டாலினும் கமலும் ரகசிய சந்திப்பு நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் பரபரப்பாகி உள்ள நிலையில் டில்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு விஷயம் அலசப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் ஒரு பங்களாவில் ரகசிய ஆலோசனை நடந்துள்ளதாகவும், சென்னைக்கு அருகே உள்ள இந்த பண்ணை வீடு ஒரு டிவி உரிமையாளருக்கு சொந்தமானதாகும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த பண்ணை வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியும், நடிகர் கமல் சந்தித்தனர்.

சிறுபான்மையர் ஓட்டுகள் சிதறிவிடும் எனவே நம்முடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது திமுகவின் திட்டமாம். அதற்காகவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் “கமல் தான் முதல்வர் வேட்பாளர் என கட்சி அறிவித்துள்ள நிலையில், ஸ்டாலினை எப்படி முதல்வராக கமல் ஏற்றுக் கொள்வார்” எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.