“பிரபல டிவி நடிகர் ஹோட்டலில் மர்ம மரணம்”… அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நித்தேஷ் பாண்டே. இவர் மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு ஹோட்டல் ஊழியர்கள் தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நடிகரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நடிகர் நித்தேஷ் பாண்டே மர்மமான முறையில் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.