பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி.!!

பிரபல சின்னத்திரை நடிகையான நவ்யா சுவாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. தினமும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.. கொரோனா  தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றது.

இதுகுறித்து நவ்யா சுவாமி கூறுகையில், “எனக்கு கடந்த 4 நாள்களாகவே உடல் சோர்வு, தலைவலி காய்ச்சல் இருந்தது. உடனே நான் டாக்டர் அறிவுரையின் அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்தேன். அந்த சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இப்போது என்னை நானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.. எனக்கு தற்போது எந்த வித அறிகுறிகளும் இல்லை.. தைரியத்துடன் இருக்கிறேன்.. நான் பணியாற்றி வந்த சீரியல் படக்குழுவினருக்கு  இதுபற்றி தெரிவித்துள்ளேன். அவர்களையும், தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்” என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையிலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.