தெலுங்கு சினிமாவில் பிரபல பாடகிகளில் ஒருவராக வளம் வரும் பிரணவி, பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பிரபல பாடகிகளில் ஒருவர் பிரணவி. இவர் ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட பல படங்களில் பாடி புகழ் பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனரான ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சினிமாவில் நான் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதற்க்கு சம்மதித்தால் மட்டுமே படுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று சில பிரபலங்கள் தன்னை வற்புறுத்தியதாக பிரணவி குற்றம் சாட்டியுள்ளார். அப்படி நடந்த சம்பவம் குறித்து அவர் மேலும் கூறுகையில், நான் சினிமாவில் பலரிடம் பாடுவதற்கு வாய்ப்பு கேட்டேன். அப்போது பிரபல இயக்குனர் ஒருவர் எனக்கு பாடுவதற்கு வாய்ப்பு தருவதாக கூறினார்.

அப்போது ஸ்டூடியோவுக்கு வருமாறு அழைத்தார். அங்கு நான் சென்றதும் பேசிக்கொண்டிருந்த அவர் திடிரென்று பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரமித்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் சின்ன பொண்ணு இப்போதுதான் பள்ளி படிப்பை முடித்துள்ளேன் என்று கூறினேன். ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் ஆபாசமாகவும் பேச ஆரமித்தார். உடனே எனக்கு கோபம் வந்து அவரை பார்த்து செருப்பால் அடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டேன்.