உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணைந்த பிரபல நடிகை…. வெளியான தகவல்…!!!

உதயநிதி ஸ்டாலின் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் ‘ஆர்ட்டிகிள் 15’. இப்படத்தை தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தமிழில் ரீமேக் செய்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

ஷிவானி

இந்நிலையில் இப்படத்தில் இணைந்த மற்றொரு பிரபலத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராஜசேகரின் மகளான ஷிவானி ‘ஆர்ட்டிகிள்15’ தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்த முடிந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக அடுத்த கட்ட படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *