”விசா”வுக்காக திருமணம் செய்த பிரபல நடிகை… யாருன்னு தெரியுமா…!!!

நடிகை ராதிகா ஆப்தே எதற்காக திருமணம் செய்துகொண்டார் என்னும் தகவலை பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்திருந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றி செல்வன், தோனி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ஹிந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ”நான் விசா வாங்குவதற்கு மட்டும் தான் திருமணம் செய்து கொண்டேன் எனவும் வெளிநாட்டில் இருப்பவரை திருமணம் செய்தால் எளிதாக விசா கிடைக்கும்” என்பதாலும் தான் திருமணம் செய்து கொண்டேன் என்றும் கூறியுள்ளார். தற்போது, இவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *