மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணையும் பிரபல நடிகர்…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!

 சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டாக்டர்’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான திரைப்படம் ‘டான்’.

sivakarthikeyan : சிவகங்கை மக்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் செய்த  மிகப்பெரிய உதவி... குவியும் பாராட்டுக்கள்

 

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இதையடுத்து, தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் இவர் ”SK 20” படத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக மரியா ரியாபோஷப்கா நடிக்கிறார்.

நிறைய பேர் இதோட ஆபத்து புரியாம சுத்துறாங்க - சிவகார்த்திகேயன் வேதனை ||  sivakarthikeyan release corona awareness video

இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ளது. இந்நிலையில், இவர் அடுத்ததாக மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *