பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி… செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை..!!!

மலையாள சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக பல வருடங்களாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் இன்னசென்ட். பல்வேறு விருதுகளை பெற்ற இவர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கேரளாவில் இருக்கும் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இவர் சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இதன்பின் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். மேலும் தன்னுடைய அனுபவத்தை வைத்து புற்றுநோய் வார்டில் சிரிப்பு என்ற புத்தகமும் எழுதியுள்ளார். இந்த நிலையில் தற்போது புற்று நோய் தாக்கத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது செயற்கை சுவாசத்தின் மூலம் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகின்றது.