குடும்பப் பெண்களை கவர்ந்து… தன் வலையில் வீழ்த்தி… கணவன்மார்களிடம் பணம் பறிக்கும் நபர்..!!

கோவையில் குடும்ப பெண்களை ஆசை வார்த்தை கூறி தன் வலையில் வீழ்த்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் குமார் கோயம்புத்தூரில் உள்ள சூளுரை அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள பிரபு என்பவரின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரபுவின் மனைவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தன் வலையில் சிக்க வைத்து பிரபுவிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். பிரபுவின் தாயார் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பிரபுவின் மனைவியை கடத்திய குமார் போனில் பிரபுவை தொடர்பு கொண்டு தனக்கு ஒரு லட்சம் பணம் கொடுக்கவில்லை என்றால் அவரது மனைவியே மும்பை அல்லது பெங்களூருக்கு விற்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இந்த போன்களின் ரெக்கார்டை வைத்து பிரபு சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை தேடி வருகின்றனர். இந்நிலையில் குமார் குறித்து விசாரணை செய்ததில் மேலும் பல தகவல் வெளியாகியுள்ளது. குமார் அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களிடம் நட்பாக பேசி அவர்களது கணவர்களை பற்றி புகார் கூறி பெண்களிடம் நெருக்கமாக இருப்பது, கணவர்களிடம் பணம் பறிப்பது என இருந்துள்ளார். இவரது வலையில் சிக்காத ஒரு பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த உண்மை தெரியவந்தது. குடும்ப பெண்களை தன்வசப்படுத்தி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழும் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.