“குடும்ப தகராறு” போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு…. புதுச்சேரியில் நடந்த சோகம்….!!!

குடும்பத் தகராறு காரணமாக போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாவட்டத்திலுள்ள வில்லியனூர் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைபர் கிரைம் பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு வயது குழந்தை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து விட்டது. இதனால் அவர்களுக்குள் தகராறு பெரிதாகி விட்டது.

ஆகவே மனமுடைந்த விஜய் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஜய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *