நான் உன்னை டைவர்ஸ் பண்ணி விடுவேன்….!! இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

விவாகரத்து செய்துவிடுவதாக கணவர் மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மணிமேகலை என்ற மகள் இருந்துள்ளார். இதில் மணிமேகலைக்கும், துரைசாமி என்பவரின் மகன் கோபிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் மணிமேகலையை அவரது மாமியார் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதற்கு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் மணிமேகலை தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் குழந்தை இல்லாத ஏக்கத்திலிருந்த மணிமேகலையை அவரது கணவர் விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மணிமேகலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில் உடல் கருகி மயங்கி விழுந்து கிடந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுபற்றி மணிமேகலையின் தந்தை தங்கராசு லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணிமேகலையை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கோபியை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கோபியின் தந்தை, தாய் மற்றும் சகோதரன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *