ஐயோ அவன் எங்க போனான்னு தெரியலையே… அடுத்தடுத்து மாயமான நபர்கள்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காணாமல் போனது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படிதாளம் பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது தாயார் லக்னேஷ்வரியிடம், வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 18ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற அவர் திரும்ப வீட்டுக்கு வராததால் லக்னேஷ்வரி தனது மகளான உமாமகேஸ்வரி என்பவருடன், மோகன சுந்தரத்தை தேடி அலைந்துள்ளார்.

இந்நிலையில் மோகன சுந்தரத்தை தேடி சென்றவர்களும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் மோகன சுந்தரத்தின் பாட்டி சுசிலா என்பவர் மோகனசுந்தரம், லக்னேஷ்வரி மற்றும் உமாமகேஸ்வரி ஆகிய 3 பேரையும் காணவில்லை என கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் காணாமல் போனது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *