பேருந்தில் தவறி விழுந்த வாலிபர் பலி…!!

உளுந்தூர்பேட்டை பகுதியில் பேருந்திலிருந்து கீழே விழுந்த இளைஞர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்துள்ள ஆசனூர் ராஜவீதியில் வசிப்பவர் சரவணன் வயது 34 . இவர் டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தந்தை குணசேகரன் என்பவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் உடல்நிலையை கவனிப்பதற்காக டெல்லியிலிருந்து ரயில் மார்க்கமாக விழுப்புரம் வந்தடைந்தார்.

Image result for பேருந்தில் வாலிபர் பலி

பின்னர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி உளுந்தூர்பேட்டை  ஆசனுர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தில் இருந்து இறங்குவதற்கு முயற்சி செய்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தை பற்றி  தகவலறிந்த எடைக்கல்  போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் கீழ்ததனியாளம்பட்டு  ஊரைச் சேர்ந்த அசுவத்தாமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.