சொகுசு கார்களில் வளம் வந்த கள்ள நோட்டு கும்பல் கைது…!!!

கள்ளநோட்டு ஆசை காட்டி பொதுமக்களிடம் மோசடி செய்தது வந்த  கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தாண்டவராயபுரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது  அந்த வழியாக பதிவெண்கள் அச்சிடப்படாமல் தாள் ஒட்டப்பட்ட இரு சொகுசு கார்கள் வந்துள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் காரை வழிமறித்து  பிடித்த போலீசார் அந்த சொகுசு கார்களை சோதனையிட்ட போது ஆறரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்தசொகுசு கார்களில் இருந்த 4 பேர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில் பொதுமக்களிடம் நல்ல நோட்டுக்கு இரு மடங்கு கள்ள நோட்டு தருவதாக மோசடி செய்ததாக அந்த நான்கு பேரும் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால்  அவர்களிடம்  இதுவரை பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் நால்வரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.