ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியின் அசத்தும் புதிய அப்டேட்…!

ஃபேஸ்புக் தன்னுடைய மெசேஜர் செயலியில் புதிய அப்டேட் வசதியை வழங்கியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனமானது தன்னுடைய மெசேஜர் செயலியில் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இதில் முக்கிய அம்சமாக ஆப் லாக், பிரைவசி செட்டிங் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரைவசி செட்டிங்கில் மியூட்டேட் ஸ்டோரீஸ், பிளாக் பீப்பில் போன்ற வசதிகள் காணப்படுகின்றன. நேட்டிவ்  ஆப் லாக் வசதி பெரும்பாலான செயலிகளில் பொதுவாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆப் லாக் மூலம் தங்களது மொபைலில் மற்றவர்கள் மெசேஞ்சர் செயலியை பார்க்க முடியாதபடி பயனர்கள் செய்ய முடியும். இதனுடன் பல்வேறு ப்ரைவசி செட்டிங் வசதிகளையும் ஒரே மெனுவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மெனுவில் செயலியை இயக்கும் பல்வேறு கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் ஃபேஸ்புக் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் வழங்கப்பட்டு வரும் ஆப் லாக் அம்சம் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *