ஃபேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவல்… வெளியான அறிவிப்பு…!!

முகநூல் பதிவுகள் தொடர்பாக பயனாளர்கள் விவரங்களை கேட்டு 2020 ஆம் ஆண்டு இரண்டாம் அரையாண்டில் மட்டும் 40,300 கோரிக்கைகள் வந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் பல நாடுகள் தங்கள் நாட்டு பயனர்களின் விவரங்களை கேட்டு அறிந்து கொள்வது 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2020 ஜுன் வரை இந்திய அரசு முன்வைத்த கோரிக்கைகளின் எண்ணிக்கையைவிட 13.3%  அதிகம் என தெரியவந்துள்ளது. பேஸ்புக்கில் பதிவுகள் வெளியிடுவோர் விவரங்களை கேட்டு இந்தியாவிலிருந்து மட்டும் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 40 ஆயிரத்து 300 கோரிக்கைகள் வந்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

37 ஆயிரத்து 865 கோரிக்கைகள் வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கும், மீதமுள்ள 2435 கோரிக்கைகள் அவசர தீர்வுக்கான விவரங்களுக்கும் பெறப்பட்டுள்ளது. முகநூல் பக்கங்களில் இருந்து விவரங்களை கேட்டு அறியும் நாடுகளில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இதில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 61,262 கோரிக்கைகள் வந்துள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு இடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு பேஸ்புக் நிறுவனம் தங்களது நிறுவனத்தின் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு விவரங்களையும் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சமூக தரக்கட்டுப்பாட்டு அறிக்கையையும் பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டது. அதில் பாலியல் செயல்பாடு தொடர்பான பதிவுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையானது முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வெறுப்பைத் தூண்டும் வகையில் பதிவிடப்படும் பதிவுகள் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சற்று குறைந்து இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது