இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ..!!! ஆண்களே பயன்படுத்திப் பாருங்க ..!!

இயற்கையான முறையில் ஆண்களின் முகத்தை மின்ன செய்யும்  சில அழகுக்குறிப்புகளை இங்கே காண்போம் .

கடலை மாவில் தயிர்  சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி  வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.தக்காளி சாறு  அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து  பேஸ்ட்டாக்கி  கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையங்கள் காணாமல் போகும்.

 

தொடர்புடைய படம்

புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.இதனால் முகம் புத்துணர்ச்சி பெறும் .தக்காளி பழத்தை பாதியாக நறுக்கி, அவற்றை கஸ்தூரி மஞ்சள் தூளில் விட்டு மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.

mint க்கான பட முடிவு

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும்  புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால் முகம் மிளிரும். சந்தனப் பொடியை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

banana க்கான பட முடிவு

சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்தில் தடவி  ஊற வைத்து கழுவி வர முகம் மிளிரும் .வேப்பிலையை அரைத்து மாஸ்க் போட்டுவந்தால்                    நல்ல நிறமாற்றம்  கிடைக்கும் .பப்பாளி பழத்தை பேஸ்ட்டாக்கி அதனை பயன்படுத்தினால் புத்துணர்ச்சியுடன் கூடிய பளபளப்பு கிடைக்கும்.