முகம் ஜொலிக்க …..முடி வளர ……இது ஒன்னு போதும் !!!

ஹெல்த்தி ஜூஸ்

தேவையான பொருட்கள் :

ஆப்பிள்  – 1

பீட்ரூட்  – 1

கேரட்  -1

நெல்லிக்காய் -1

இஞ்சி –  சிறிய துண்டு

பேரீச்சை –   5

மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன்

சீரகத்தூள் –  1/4 ஸ்பூன்

பனங்கற்கண்டுத்தூள் –  2 டீஸ்பூன்

தண்ணீர் –   தேவையான அளவு

ஆப்பிள், பீட்ரூட், கேரட், நெல்லிக்காய், க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் பீட்ரூட்  மற்றும்  இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பேரீச்சைமற்றும்  நெல்லிக்காயின் விதைகளை நீக்கவும்.பின்  நறுக்கிய ஆப்பிள், பீட்ரூட், கேரட், நெல்லிக்காய், இஞ்சி , பேரீச்சை, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும்  பனங்கற்கண்டுத்தூள் ஆகியவற்றை  சேர்த்து தண்ணீர்விட்டு மையாக அரைத்து வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் பருகி வர முகம் ஜொலிப்பதோடு,  நோய் எதிர்ப்பு சக்தி கூடும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *