முகக் கவசம் இப்படி அணியக்கூடாது….. இணையத்தை கலக்கும் நட்சத்திரங்களின் வீடியோ….!!!

முகக் கவசம் எப்படி எல்லாம் அணியக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான “போடா போடி” எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இவர் தற்போது நாயகி, வில்லி உள்ளிட்ட மாறுபட்ட கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து வருகிறார். சொல்லப்போனால் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இருந்தும் வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசியின் அவசியத்தைப் பற்றி ஒரு அழகிய வீடியோவை எடிட் செய்து வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாக பரவியது. இந்நிலையில் அவர் முக கவசத்தை  எப்படி எல்லாம் அணியக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக சினிமா நட்சத்திரங்களை வைத்து ஒரு வீடியோ எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் நடிகர்கள் கிருஷ்ணா, சதீஷ், யோகி பாபு, சந்தீப் கிஷன் ஆகியோரும் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, வித்யூ லேகா, வரலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர். இந்த முகக் கவச விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *