மாஸ்க் போடாம யாராச்சும் போறீங்களா….? பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு…. அதிகாரிகளின் அறிவுரை….!!!

முகக் கவசம் அணியாமல் பயணிகள் செல்கின்றனரா என அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. எனவே அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மேலும் நோய் பரவலை தடுக்க வெளியே செல்லும் அனைவரும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அதிகாரிகள் சார்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் முக கவசம் அணியாமல் பயணிகள் பயணம் செய்கிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் வட்டார போக்குவரத்து அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர், அரசு போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இதனையடுத்து சோதனையின் போது முக கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு அதிகாரிகள் உரிய அறிவுரை வழங்கியதோடு முககவசங்களையும் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *