“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” ஜோடிகள் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.
தமிழ் சினிமாவில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரஞ்சனி. இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் இளைய மகளும் ஆவார். நிரஞ்சனியும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க, கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் புதுமண தம்பதிகள் இருவரும் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு நிரஞ்சனி எடுத்துள்ள புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.